காரைக்குடியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை... பக்கத்து வீட்டு இளைஞர் கைது!

 
arrest

காரைக்குடி அருகே மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த பக்கத்து வீட்டு இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சுதந்திரபுரத்தை சேர்ந்தவர் புவனேசுவரி. இவரது மகள் சுகன்யா (28). மனவளர்ச்சி குன்றிய சுகன்யா, கடந்த 16ஆம் தேதி கோவில் திருவிழாவில் நடந்த அன்னதானத்தில் சாப்பிட செல்வதாக கூறிச் சென்றார். பின்ன இரவாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

dead body

இந்த நிலையில், சுதந்திரபுரம் பகுதியில் உள்ள முந்திரிக் காட்டில், சுகன்யா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.‌ தகவலின் பேரில் சாக்கோட்டை போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர்.  

இந்த சம்பவம் குறித்து காரைக்குடி டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், மனவளர்ச்சி குன்றிய சுகன்யாவை, அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் தேவா(20) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து, அவரை சாக்கோட்டை போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.