ஊத்தங்கரை அருகே மழையில் வீட்டின் மேற்கூரை தகடு விழுந்ததில் பெண் பலி!

 
dead

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மழையின்போது வீட்டின் மேற்கூரை தகடு பெயர்ந்து விழுந்ததில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரபேட்டை அருகே உள்ள பொம்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமன். இவர் ஊர்க்காவல் படை வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பச்சையம்மாள். இந்த நிலையில், நேற்று மாலை ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததது. அப்போது, கொடியில் காய வைத்த துணிகளை எடுப்பதற்காக பச்சையம்மாள் சென்றிருந்தார்.

krishnagiri

அப்போது, வீசிய பலத்த காற்றின் காரணமாக பக்கத்து வீட்டின் மேற்கூரையில் இருந்த தகரத்தினாலான தகடு பறந்து வந்து பச்சையம்மாளின் தலையில் வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த சிங்காரப்பேட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.