மணப்பாறை அருகே பாம்பு கடித்து பெண் பலி!

 
dead

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பாம்பு கடித்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மாங்கனாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்ன பொண்ணு (37). இவர் நேற்றிரவு தனது வீட்டில் உள்ள கட்டிலில் படுத்து தூங்கி உள்ளார். அப்போது, நள்ளிரவில் அவரது வீட்டிற்குள் புகுந்த விஷப் பாம்பு ஒன்று, சின்ன பொண்ணுவின் கையில் கடித்துள்ளது. வலி தாங்க முடியாமல் அவர் கண் விழித்து பார்த்தபோது அருகில் பாம்பு செல்வது தெரியவந்து.

snake bite

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்,சின்ன பொண்ணுவை மீட்டு சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சின்ன பொண்ணு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புகாரின் அடிப்படையில் புத்தாநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.