கணவர் 2-வது திருமணம் செய்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... முசிறியில் சோகம்!

 
suicide

திருச்சி மாவட்டம் முசிறியில் கணவர் 2-வது திருமணம் செய்து கொண்டதால் வேதனையில் இளம்பெண்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

திருச்சி மாவட்டம் முசிறி கலேஜ் ரோடு விசாலாட்சி நகரை சேர்ந்தவர் விஜயராஜ் மனைவி புவனேஷ்வரி(56). இவரது மூத்த மகள் சிவசங்கரி(30). இவருக்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் குரு மகாராஜா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில், குரு மகாராஜாவுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேறு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு தலைமறைவாகி உள்ளார்.

musiri

இதனால் சிவசங்கரி அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளார். அப்போது, குரு மகாராஜா அந்த பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், அவர் எங்கே உள்ளார் என்ற தகவலும் தெரியவில்லை. இதனால் சிவசங்கரி மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவசங்கரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது தாய் புவனேஷ்வரி அளித்த புகாரின் அடிப்படையில் முசிறி போலீசார், சிவசங்கரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவர் 2-வது திருமணம் செய்து கொண்டதால் வேதனையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.