திருச்சி அருகே குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள அழுந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி(37). இத்தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனலட்சுமி கடந்த சில ஆண்டுகளாக கணவரை பிரிந்து, தனியே வாழ்ந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் உறவினர்கள் அவரை சமாதானம் செய்து, மீண்டும் கணவர் சுரேஷின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். 

trichy gh

இந்த நிலையில், நேற்று வீட்டில் இருந்த தனலட்சுமிக்கும், அவரது கணவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, உறவினர்கள் தனலட்சுமியை சமாதானம் செய்ய முயன்றபோது, அவர்களிடமும் தகராறு செய்துள்ளார். இதனை தொடர்ந்து, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் மணிகண்டம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.