அருப்புக்கோட்டை அருகே குடும்ப தகராறில் பெண் வெட்டிக்கொலை - கணவர் கைது!

 
dead body

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே குடும்ப தகராறில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆமணக்கு நத்தம் பகுதியை சேர்ந்தவர் அய்யனார். தொழிலாளி. இவரது மனைவி ராமுதாய் (58). கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் அய்யனார், ராமுதாயின் வீட்டிற்கு சென்று அவருடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த அய்யனார், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராமுதாயை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் பலத்த காயமடைந்தார். 

aruppukottai

அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ராமுதாயை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராமுதாய் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் பந்தல்குடி போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஐயனாரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.