தருமபுரி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... குடும்ப தகராறில் சோகம்!

 
suicide

தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள சிறுகனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மீனா (25) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இதனிடையே, கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மீனா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.

dharmapuri gh

இந்த நிலையில், சம்பத்தன்று செல்வத்திற்கும், மீனாவுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த மீனா வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த செல்வம், மனைவி தூக்கில் சடலமாக  தொங்குவதை கண்டு கதறி அழுதார்.

தகவல் அறிந்த இண்டூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து மீனாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இண்டூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.