திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... பல்லடம் அருகே சோகம்!

 
suicide

பல்லடம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவத்தில், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவரை போலீசார் கைது செய்தனர்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் சத்தியசீலன்(28). இவருக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த வேலுசாமி மகள் ஹரி பிரியா(21) உடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 6 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், சத்தியசீலன் குடும்பத்திருனக்கும், ஹரிபிரியா குடும்பத்தினருக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஹரிபிரியா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். 

palladam

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இதுகுறித்து கணவன் - மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த ஹரிபிரியா அன்றிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  திங்கட்கிழமை அதிகாலையில் கண் விழித்த சத்தியசீலன் குடும்பத்தினர், ஹரிபிரியா துக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஹரிப்பிரியாவின் தந்தை வேலுசாமி, பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 அதன் பேரில், போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிபியாவை தற்கொலைக்கு தூண்டியதாக, அவரது கணவர் சத்தியசீலனை கைது செய்தனர். இதனிடையே, திருமணமாகி  2 ஆண்டுகளில் ஹரிபிரியா தற்கொலை செய்ததால் இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.