கணவர் இறந்த துக்கத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை... சத்தியமங்கலம் அருகே சோகம்!

 
sathyamangalam

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கணவர் இறந்த வேதனையில் பெண் சாணிப்பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள டி.ஜி.புதூர் நேதாஜி தெருவை சேர்ந்தவர் பெருமாள்.  இவரது மனைவி திலகா (51). இவர்களுக்கு விஜய் (27) என்ற மகன் உள்ளார். திலகா, கடந்த 2 வருடமாக கர்ப்பப்பையில் ஏற்பட்ட கட்டிக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெருமாள் இறந்து விட்டார். இதனால் திலகா, கணவரின் நினைவாக மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை காலை விஜய் வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதனால் வீட்டில் திலகா மட்டும் இருந்துள்ளார்.

sathyamangalam

அப்போது, கணவரின் மறைவால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் இருந்த சாணிப்பவுடரை குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றார். மதிய உணவிற்காக விஜய் வீட்டுக்கு வந்தபோது, திலகா மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக திலகாவை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே திலகா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.