கோவை அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டுயானைகள் வனத்திற்குள் விரட்டியடிப்பு!

 
elephant

கோவை தொண்டாமுத்தூர் அருகே வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய காட்டுயானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாளியூர் வனப்பகுதியில் இருந்து இன்று அதிகாலை குட்டியுடன் வெளியேறிய 5 காட்டு யானைகள், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன. குடியிருப்புகளின் வழியாக அந்த யனைக்கூட்டம் சாலையை கடந்து சென்றது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கிராமத்தினருடன் இணைந்து காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, காட்டுயானைகள் வனப்பகுதிகள் புறப்பட்டு சென்றன.

elephant

இதனிடையே அந்த பகுதி மக்கள், காட்டுயானைகளை "போ ராஜா போ' என அன்பாக கூறி விரட்டிய காட்சிகளை சிலர் தங்களது செல்போனில் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.