பெருந்துறை அருகே குளத்திற்கான நீர்வழிப்பாதை அடைப்பால் வீணாகிய மழைநீர்... எம்எல்ஏ நேரில் ஆய்வு!

 
perundurai

பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையம் சித்தன்பட்டி குளத்திற்கு வரும் நீர்வழிப்பாதைகள் அடைபட்டதால் மழைநீர் வீணாகிய நிலையில், குளத்தை பெருந்துறை எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி காஞ்சிகோயில் சாலையில் சித்தன்பட்டி குளம் அமைந்துள்ளது. இந்த குளத்திற்கு சீலம்பட்டி, எல்லப்பாளையம், ஒண்டிப்புலியங்காடு மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் இருந்து மழைநீர் வடிந்து குளத்திற்கு வருமாறு நீர்வழிப்பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் தற்போது நீர்வழிப் பாதைகள் அடைக்கப்பட்டு காணப்படுகிறது. இதனால் கடந்த 3 முறை பெய்த மழைநீர் குளத்திற்கு செல்லாமல் வீணாகியது.

இதனால் அந்த பகுதியில் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைப்பது பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயக்குமாரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில், எம்எல்ஏ ஜெயக்குமார் சித்தன்பட்டி குளத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, நீர்வழி பாதைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு, நெடுஞ்சாலை துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். 

dd

இந்த ஆய்வின்போது, பெருந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூர் செயலாளர் கே.எம்.பழனிசாமி, பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி கே. செல்வராஜ், பெருந்துறை பேரூர் செயலாளர் கல்யாண சுந்தரம், வார்டு செயலாளர் ராஜா, கே.பி.எஸ். மோகன் குமார்,  ன்.எஸ்.கே. சக்திவேல், எஸ்.ஆர். வி.சாமிநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு கோபால், ரகு, எல்லப்பாளையம் நடராஜ், காலனி துரை, டீக்கடைத்துரை உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் உடன் இருந்தனர்.