அரியலூரில் அனைத்து ஊராட்சிகளிலும் நவ.1-இல் கிராம சபை கூட்டம் - ஆட்சியர் தகவல்!

 
collector ariyalur

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் நவம்பர் 1ஆம் தேதி அன்று கிராம சபை கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் (01.11.2022) உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சென்னையிலிருந்து பெறப்பட்ட கூட்டப் பொருட்கள் மற்றும் இதர கூட்டப் பொருட்கள் விவாதிக்கப்படும்.

grama sabha

இக்கிராம சபை கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துத்துறை அலுவலர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஓத்துழைப்பு வழங்குமாறு ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.