தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் சாதித்த மாணவ, மாணவிக்கு வேலூர் எஸ்.பி. பாராட்டு!

 
vellore

தேசிய அளவிலான சிலம்ப போட்டிகளில் வெற்றி பெற்ற வேலூரை சேர்ந்த மாணவ, மாணவியை, மாவட்ட எஸ்பி ராஜேஸ் கண்ணன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

தேசிய அளவிலான சிலம்ப போட்டிகள், கடந்த 31ஆம் தேதி வேலூரில் உள்ள வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றன. இந்த போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜுனோ பிராங்க்ளின்(6) ஒற்றை சிலம்பம், இரட்டை சிலம்பத்தில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றார். இதேபோல் வேலூரை சேர்ந்த செல்வி. சுபிக்ஷா(18) வெண்கலப்பதக்கமும் வென்று சாதனை படைத்தார்.

vellore sp

இந்த நிலையில், சிலம்ப போட்டியில் பதக்கம் வென்ற  ஜுனோ பிராங்க்ளின், சுபிக்ஷா ஆகியோர் நேற்று வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், எஸ்பி ராஜேஸ் கண்ணனை நேரில் சந்தித்து, வெற்றிக்கோப்பை மற்றும் சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றனர். அவர்களை, எஸ்பி ராஜேஸ் கண்ணன் பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். இந்த சந்திப்பின்போது, சிலம்பம் ஆசான் உமாநாத் உடனிருந்தார்.