தனது தொகுதி பிரச்சினைகள் குறித்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கிய, வானதி சீனிவாசன்!

 
vanathi

கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசனம் தனது தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சினைகள் அடங்கிய மனுவை இன்று மாவட்ட ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்து வழங்கினார். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தங்கள் தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆட்சியரிடம் தெரிவிக்கும்படி கோரிக்கை விடுத்து, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதி இருந்தார். அதனை ஏற்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிர் அணி செயலாளருமான வானதி சீனிவாசன் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை சந்தித்து, தனது தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்த மனுவை வழங்கினார். 

vanathi

கோரிக்கை மனுவில் கூறி அவர் இருப்பதாவது, கோவை தெற்கு தொகுதி முழுவதும் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக சேதம் அடைந்துள்ளது. அனைத்து சாலைகளையும் உடனடியாக சரி செய்து போக்குவரத்துக்கு உகந்த தார் சாலையாக மாற்றித்தர வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்குட்பட்ட பணிகளை விரைந்து முடிக்கப்பட வேண்டும். பெரியக்கடை வீதி, ராஜவீதி, ரங்கே கவுண்டர் வீதி மற்றும் ஒப்பணக்கார வீதியின் ஒருங்கிணைந்த மல்டி லெவல் பாக்கிங் வசதி அவசியம் வேண்டியுள்ளது. டி.கே. மார்க்கெட்டின் உட்கட்டமைப்பு மற்றும் மல்டி லெவல் பார்க்கிங் வசதியுடன் மேம்படுத்த வேண்டும். 

கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவு படுத்த வேண்டும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைக்கலாம். லங்கா கார்னர் பகுதியில் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் அகற்ற தானியங்கி மோட்டார்கள் பொருத்தப்பட வேண்டும். சுங்கம் காந்திநகர், அம்மன் குளம், ஹைவேஸ் காலனி,  செல்வபுரம் ரோடு செட்டி வீதி பகுதி மற்றும் சேத்துமா வாய்க்கால் பகுதிகளில் நீண்ட காலமாக குடியிருக்கும் மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.