வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள்... கோவை சிறையில் அவர் இழுத்த செக்கிற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி மரியாதை!

 
voc

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாளையொட்டி, கோவை மத்திய சிறையில் அவர் இழுத்த செக்கிற்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வைகோ, முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மத்திய சிறை வளாகத்தில் வ.உ.சி சிதம்பரனார் இழுத்த செக்கிற்கும் பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

voc

தமிழக அரசின் சார்பில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியார் வ.உ. சிதம்பரனாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், அங்கு வைக்கப்பட்டு உள்ள உருவ படத்திற்கு மலர் துவியும் மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கல்பனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  

voc

தொடர்ந்து, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அதிமுக எம்எல்ஏ வ.உ.சிதம்பரனாரின் உருவ படத்திற்கும், அவர் இழுத்த செக்கிற்கும் அஞ்சலி செலுத்தினர். இதேபோல், மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, வ.உ.சி. இழுத்த  செக்கிற்கு மரியாதை செலுத்தினார். முன்னதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், வைகோவும் ஒருவரை சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர்.