நாட்றம்பள்ளி அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது!

 
bribe

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ராணுவ வீரரிடம் பட்டா மாறுதலுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி புல்லானேரி பகுதியை சேர்ந்தவர் தமிழரசன்(32). ராணுவ வீரர். இவருக்கு பெற்றோர் எழுதிக்கொடுத்த 1.60 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக மல்லகுண்டா கிராம நிர்வாக அலுவலர் முனியப்பனிடம் விண்ணப்பித்துள்ளார். அப்போது, பட்டாப்பெயர் மாற்றம் செய்ய முனியப்பன் ரூ.3,000 லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் தர விரும்பாத தமிழரசன், இது குறித்து வேலூர் லஞ்ச துறையில் புகார் அளித்தார்.

natrampalli

அவர்கள் வழங்கிய ஆலோசனைப்படி நேற்று நாட்றம்பள்ளி அடுத்த தண்ணீர் பந்தல் பகுதியில் விஏஓ முனியப்பனிடம், தமிழரசன் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் பணத்தை வழங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் கௌரி தலைமையிலான போலீசார், முனியப்பனை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரை, நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.