திருச்சி அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவிகள் இருவர் பலி!

 
drowned

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவிகள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை செங்குடி தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் சத்தியா (13). அதே பகுதியை சேர்ந்த வரதராஜன் மகள் தனுஷ்கா (14). இவர்கள் திருவெள்ளறை அரசு மேல்நிலைப் பள்ளியில் முறையே 7 மற்றும் 8ஆம் வகுப்பு படித்து வந்தனர். தோழிகளான இவர்கள் இருவரும் நேற்று அந்த பகுதியில் உள்ள சிங்ககுளத்தில் உறவினர்களோடு குளித்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென சத்தியா, தனுஷ்கா ஆகியோர் நீரில் மூழ்கினர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடிச் சென்று குளத்தில் தேடிப்பார்த்தனர்.

dead body

அப்போது,  மாணவிகள் சத்தியா, தனுஷ்கா ஆகியோர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். பின்னர், மணச்சநல்லுர் போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணச்சநல்லுர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இந்த சம்பவம் குறித்து மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளத்தில் மூழ்கி 2 பள்ளி மாணவிகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.