தூத்துக்குடி அருகே சட்டவிரோதமாக செம்மண் அள்ளிய இருவர் கைது: டிப்பர் லாரி, ஒரு யூனிட் செம்மண் பறிமுதல்!

 
sand theft

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் அருகே சட்டவிரோதமாக செம்மண் திருடிய 2 நபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒரு யூனிட் மணல், டிப்பர் லாரி  

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முடுக்குமீண்டான்பட்டி பகுதியில் உள்ள கோயில் அருகே இருவர் சட்ட விரோதமாக டிப்பர் லாரியில் செம்மண் திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து, போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

arrest

அதில் அவர்கள் நாலாட்டின்புதூர் கல்லூரணியை சேர்ந்த செல்லக்கனி (32), பொன்மாடசாமி (42) ஆகியோர் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து, போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ஒரு யூனிட் செம்மண் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.