தூத்துக்குடியில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது; ரூ.6.40 லட்சம் மதிப்பிலான 9 பைக்குகள் பறிமுதல்!

 
bike theft

தூத்துக்குடி நகர் பகுதியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 நபர்களை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.6.40 லட்சம் மதிப்பிலான 9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மணிநகர், டூவிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் திருட்டு போயின. இது தொடர்பாக வாகன உரிமையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், டவுன் டிஎஸ்பி சத்தியராஜ், காவல் ஆய்வாளர் ஐய்யப்பன் தலைமையிலான தனிப்படை போலீசார் திருட்டு நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றி தீவிர மேற்கொண்டு வந்தனர்.

tuti

அப்போது, தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டது, துத்துக்குடி பி அண்ட் டி காலனியை சேர்ந்த ராமர் (31), பசும்பொன் நகரை சேர்ந்த பரமசிவன் (எ) சிவா(28) ஆகியோர் என தெரிய வந்தது. இதனை அடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் இருந்த ரூ.6.40 லட்சம் மதிப்பிலான 9 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.