சத்தியமங்கலத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்... முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் பங்கேற்பு!

 
admk

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை கண்டித்து சத்தியமங்கலத்தில் முன்னாள் அமைச்சர்  செங்கோட்டையன் தலைமையில் அதிமுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழக அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை சமீபத்தில் நடைபெற்றது. போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்ககளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியாக போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.  இந்த நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

admk

அதன்படி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பணிமனை முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான  செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், பெருந்துறை எம்எல்ஏ எஸ் ஜெயக்குமார், பவானி எம்எல்ஏ பண்ணாரி உள்பட 100-க்கும் மேற்பட்ட போக்குவரத்துக் கழக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது 14- ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.