போக்குவரத்து விதிமீறல் : ஈரோடு மாநகரில் அக்டோபர் மாதத்தில் 1,932 வழக்குகள் பதிவு!

 
 traffic police

ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த அக்டோபர் மாதத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக போலீசார் 1,932 வழக்குகள் பதிவு செய்து, ரூ.3.30 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.

ஈரோடு மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணி, விதிமுறைகளை மீறும் வாகனஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணிகளை ஈரோடு வடக்கு மற்றும் தெற்கு போக்குவரத்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மாநகர பகுதிகளில் கடந்த அக்டோபர் மாதம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக தெற்கு போக்குவரத்து போலீசார் சார்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. 

generic erode

அதன் படி, கடந்த அக்டோபர் மாதத்தில் சிக்னலில் நிற்காமல் சென்றதாக 219 வழக்குகளும், மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 49 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும், தலைக்கவசம் அணியாமல் சென்றதாக 642 வழக்குகளும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றதாக 301 வழக்குகளும் என மொத்தம் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக ஆயிரத்து 932 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் ரூ.3 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக, போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.