சுற்றுலா சார்ந்த தொழில் புரிவோர் இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும் - சேலம் ஆட்சியர் கார்மேகம்!

 
collector

சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சார்ந்த தொழில் புரிவோர் இணையதளம் மூலமாக உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி பதிவு செய்ய வேண்டு என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், சுற்றுலாத்துறை மூலமாக பெட் அண்ட் பிரேக் ஃபாஸ்ட் திட்டம் / ஹோம் ஸ்டே, சாகச சுற்றுலா இயக்குபவர்கள், கேம்பிங் இயக்குபவர்கள், கேரவன் மூலமாக சுற்றுலா இயக்குபவர்கள்  /  கேரவன் பூங்கா இயக்குபவர்கள் உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த நிறுவனங்கள் அரசாணை மற்றும் சுற்றுலா வழிகாட்டு நெறிமுறைகளின் படி பதிவு செய்து கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கடந்த 27.09.22 உலக சுற்றுலா தினத்தன்று, சுற்றுலாத்துறை அமைச்சரால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.

salem

எனவே சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சார்ந்த தொழில் புரிவோர் பெட் அண்ட் பிரேக் ஃபாஸ்ட் திட்டம் / ஹோம் ஸ்டே, சாகச சுற்றுலா இயக்குபவர்கள், கேம்பிங் இயக்குபவர்கள், கேரவன் மூலமாக சுற்றுலா இயக்குபவர்கள்  /  கேரவன் பூங்கா இயக்குபவர்கள் அனைவரும் https://www.tntouismtors.com/ என்ற இணையதளத்தின் மூலமாக உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி அவசியம் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலர், சுற்றுலா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், சேலம் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 8939896397 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.