திருவாரூர் பிடாரி கோவில் குளம் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்!

 
tvr

திருவாரூர் நகராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட பிடாரி கோவில் குளத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.09 கோடி மதிப்பில் குளத்தின் 4 கரைகளிலும் 317 புள்ளி 80 மீட்டர் நடைபாதை அமைத்து, குழந்தைகள் விளையாடும் விளையாட்டு அமைப்புகள் மற்றும் மின்விளக்கு வசதிகளுடன் அமைக்க புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நகராட்சி ஆணையரிடம் பணிகளை தரமான முறையிலும், குறித்த காலத்திற்குள் விரைந்து முடிக்கவும்படி அறிவுறுத்தினார்.

tvr

தொடர்ந்து, நகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டில் (மயிலாடுதுறை சாலை)  உள்ள குட்டைக்குளத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஆகாய தாமரை அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.