திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவி கடத்தல்... ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் பெற்றோர் புகார்!

 
erode

திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்ற நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அவரது பெற்றோர் ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் மருதாச்சலபுரம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (42). பனியன் கம்பெனி உரிமையாளர். இவரது மனைவி காயத்ரி. இவர்களது 2-வது மகள் பூமணி(19). இவர் திருப்பூரில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஏப். 22ஆம் தேதி  பூமணி, ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த முகாசிபிடாரியூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றபோது  திடீரென மாயமானார். இந்த நிலையில், பூமணியை திருப்பூரைச் சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் மாணிக்கராஜ்  என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது.

erode sp office

அவருக்கு ஏற்கனவே திருமணமாகி  மனைவியும், குழந்தையும் உள்ளதும், பூமணி தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்றபோது அங்கு பணிபுரிந்த மாணிக்கராஜுடன் பழக்கம் ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனை அடுத்து, அய்யப்பன் சென்னிமலை காவல் நிலையத்தில் கடந்தாண்டு ஏப்.27ல் புகார் அளித்தார். ஆனால் பூமணி குறித்த எந்த தகவலும் தெரியவில்லை என்றும், இதுகுறித்து போலீசார் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அய்யப்பன் - காயத்ரி தம்பதியினர் நேற்று ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், தங்களது மகள் காணாமல போய் ஒரு வருடமாகும் நிலையில், அவர் குறித்த எந்த தகவலும் தெரியவில்லை என்றும்,  மாணிக்கராஜ் பூமணியை எங்கு வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.  இதனால் தாங்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளதாகவும், எனவே தங்களது மகளை மீட்டு, சேர்த்து வைக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.