குன்னத்தூர் சிஎஸ்ஐ இம்மானுவேல் ஆலயத்தில் முப்பெரும் விழா.. முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன் பங்கேற்பு!

 
peru

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் சிஎஸ்ஐ இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் சிஎஸ்ஐ இம்மானுவேல் ஆலயத்தில் 14ஆம் ஆண்டு தொடக்க விழா, கிறிஸ்துமஸ் புத்தாண்டு நிறைவு விழா மற்றும் குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. இந்த முப்பெரும் விழாவில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான கே.சி.கருப்பணன், பெருந்துறை எம்எல்ஏ-வும் ஆன எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கு முன்னாள் எம்எல்ஏ கே.எஸ். பழனிச்சாமி தலைமை வகித்தார். குன்னத்தூர் பேரூராட்சி சேர்மன் ஏர்டெக் ரவி(எ) குமாரசாமி, ஒன்றிய செயலாளர் தனசேகரன், நகர செயலாளர் சரன்பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

peru

இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன், பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் குடியிருந்து வரும் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் பயனடையும் வகையில், பெருந்துறை அருகே கல்லறை தோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் பேசும்போது, அதேபோல பெருந்துறை தொகுதி முழுவதும் உள்ள கிறிஸ்துவ மக்கள் பயன்பெறும் வகையில் திருமண மண்டபம்  அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். 

இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் வட்டகை தலைவர் எட்வின் ராஜ்குமார், பெருமாநல்லூர் குன்னத்தூர் போதக சேகர திருச்சபை ஆயர் சுரேஷ்குமார், மாவட்ட பொருளாளர் கேபிஎஸ் மணி, ஒன்றிய துணை செயலாளர் அருண்குமார், நகர துணை செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் நகர செயலாளர் அய்யாசாமி, கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர் ராமசாமி, குன்னத்தூர் பேரூராட்சி உறுப்பினர்கள் பூங்கொடி சுப்பிரமணியம், புஷ்பா சுப்பிரமணியம், சுப்பிரமணியம் சின்னராஜ், சரஸ்வதி கார்த்திகேயன் மாணிக்கம், ஒன்றிய குழு உறுப்பினர் மோகன சுந்தரி மாணிக்கம் , பசுபதி நந்தகுமார், பாசறை பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.