நிலக்கோட்டை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது - 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்!

 
cannabis

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைதுசெய்த தனிப்படை போலீசார், அவர்களிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக தென் மண்டல ஐ.ஜி-க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், ஐ.ஜி., தனிப்படை சார்பு ஆய்வாளர் அழகுபாண்டி மற்றும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அணைப்பட்டி ஆத்துப்பாலம் அருகே சந்தேகத்திற்கு உரிய விதமாக ஆட்டோவில் நின்றிருந்த 3 பேரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது, அவர்கள் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

arrest

அதில் அவர்கள் அணைப்பட்டியை சேர்ந்த லட்சுமணன், கண்ணன் மற்றும் வெங்கடேஷ் என்பதும், அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனை அடுத்து, அவர்கள் 3 பேரையும் கைதுசெய்த தனிப்படை போலீசார், அவர்களிடமிருந்து 2.5 கிலோ கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கைதானவர்களை விளாம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு 3 பேர் மீதும் விளாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.