புதிய நெல் சேமிப்பு கிடங்கு கட்டுமான பணிகளை ஆய்வுசெய்த திருவாரூர் ஆட்சியர்!

 
tvr

திருவாரூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நெல் சேமிப்பு கிடங்கு வளாகத்தில் ரூ.4.02 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் சேமிப்பு கிடங்குகளை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

திருவாரூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நெல் சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு ரூ.4 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் தலா 2,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 3 கான்கிரீட் தளத்துடன்கூடிய நெல் சேமிப்பு கிடங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

tvr

அப்போது, சேமிப்பு கிடங்கு கட்டுமான பணிகளின் முன்னேற்றம் குறித்து பொறியாளரிடம் கேட்டறிந்தார். மேலும், பணிகளை தரமானதாக, குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு செய்ய, அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தினார்.