தீரன் சின்னமலை நினைவு தினம்... ஈரோட்டில் எஸ்.பி. சசிமோகன் தலைமையில் 1,300 போலீசார் பாதுகாப்பு!

 
sp sasimohan

தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் எஸ்.பி. சசிமோகன் தலைமையில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினமான இன்று ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி, அமைச்சர்கள், ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, எம்.எல்.ஏ-க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சி நடைபெறும் ஓடாநிலையில் மாவட்ட எஸ்.பி., சசிமோகன் தலைமையில் 2 ஏ.டி.எஸ்.பி-க்கள்,  3 டி.எஸ்.பி.க்கள், 10 காவல் ஆய்வாளர்கள் என 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக ஈரோடு, மொடக்குறிச்சி தீயணைப்பு துறையின் சார்பில் 2 தீயணைப்பு வாகனங்களும் விழா நடைபெறும் இடத்தில் முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட உள்ளது. 

dheeran chinnamalai

இதேபோல், இன்று ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் நீர் நிலைகளுக்கு சென்று புனித நீராடி வழிபாடு செய்வார்கள். இதனால் ஈரோடு மாவட்டம் பவானி, கொடுமுடி, ஈரோடு காவேரி கரை, கொடிவேரி, பவானிசாகர் அணை உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு  பணியில் ஈடுபட உள்ளனர்.  இந்த பணிக்காக 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், ஆடிப்பெருக்கையொட்டி, ஈரோடு மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.