வீட்டின் முன் நின்ற பைக்கை லாவகமாக திருடிச்சென்ற இளைஞர்கள்... ஒமலூர் அருகே பரபரப்பு!

 
bike theft

ஓமலூர் அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டி பகுதியை சேர்ந்தவர் இந்திரன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் முன்பு விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலையில் எழுந்து சென்று பார்த்தபோது இருசக்கர வாகனம் மாயமாகி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திரன், இது குறித்து ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், சம்பவ நடைபெற்ற பகுதிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

bike theft

மேலும், அங்கு பொருத்த இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது, இந்திரனின் வீட்டிற்கு நள்ளிரவு 12 மணி அளவில் வந்த 2 மர்மநபர்கள், அவரது இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து, ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.