குமரி அருகே தாமிரபரணி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட மூதாட்டி... 2-வது நாளாக தொடரும் தேடுதல் பணி!

 
kumari

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்த 60 வயது மூதாட்டி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டம் திருவட்டார் அருகேயுள்ள பாரதபள்ளி மடத்துவிளை பகுதியை சேர்ந்தவர் தங்கமணி. கூலி தொழிலாளி. இவரது மனைவி புஷ்பபாய் (60). இத்தம்பதிக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று மதியம் புஷ்ப பாய் வீட்டின் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக புஷ்பபாய் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள், இது குறித்து குலசேகரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

\kumari

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தாமிரபரணி ஆற்றில் புஷ்பபாயை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவாகியும் அவரை மீட்க முடியாத நிலையில் தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு, இன்று காலை மீண்டும் துவங்கியது. தீயணைப்பு வீரர்கள் கட்டி ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தாமிரபரணி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால்,  புஷ்பபாயை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.