நெமிலி அருகே வெள்ளத்தில் சிக்கித்தவித்த போதை இளைஞரை மீட்ட போலீசார்!

 
flood

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே சிறுணமல்லி தரைப்பாலத்தில் சிக்கி தவித்த போதை இளைஞரை காவலர்கள் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்.  

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெமிலி அருகே உள்ள கள்ளாறு சிறுணமல்லி தரைப்பாலத்தை வெள்ளநீர் மூழ்கடித்து செல்கிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.  இந்த நிலையில், மதுபோதையில் வந்த இளைஞர் ஒருவர் ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தை கடக்க முயன்றார். வெள்ளநீரில் பாதி பாலத்தை கடந்த நிலையில், நடுவழியில் செய்வதறியாது திகைத்து நின்றார்.


இதனை கண்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நெமிலி காவல் நிலைய காவலர்கள் தங்கராஜ், பிலால்  அகமது மற்றும் முரளி ஆகியோர் ஆற்றில் சென்று அந்த போதை இளைஞரை மீட்டு கரை சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து வீடியோ காட்சிகளை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் டிவிட்டர் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு உள்ள நிலையில், இதனை பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.