காதலியை திருமணம் செய்து வைக்க தாமதித்த பெற்றோர்... விரக்தியில் உயிரை மாய்த்த இளைஞர்!

 
suicide

ஸ்ரீவில்லிபுத்தூரில் காதலியை திருமணம் செய்து வைக்க பெற்றோர் தாமதம் செய்ததால் விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இடைய பொட்டல் பகுதியை சேந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இவரது மகன் சிவராமன். இவர் மம்சாபுரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், காதலிக்கும் பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அவர்கள் சிறிது காலத்துக்கு பின் திருமணம் செய்து வைப்பதாக கூறி காலந்தாழ்ந்தி வந்துள்ளனர். இதனால் சிவராமனம் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். 

srivilliputhur

இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். தகவலின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் காவல் நிலைய போலீசார், சிவராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.