சேலத்தில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய தாய்!

 
organ donation

சேலத்தில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகளை அவரது தாயார் தானமாக வழங்கினார்.

சேலம் அல்லிக்குட்டை பகுதியை சேர்ந்த கமலநாதன் - நவமணி தம்பதியினர். இவர்களது மகன் நிவாஸ்(25).  ஐ.டி., நிறுவன ஊழியரான இவர் கடந்த 15ஆம் தேதி அம்மாபேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தனியார் பேருந்து மோதியதில் படுகாயமடைந்தார். இதனை அடுத்து, அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனை அடுத்து, மருத்துவர்கள் அவரது தாய் நவமணியிடம் உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.

slm

அதனை ஏற்று, நவமணி நிவாஸின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதம் தெரிவித்தார். தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் நிவாசின் இதயம், 2 வால்வுகள், சிறுநீரகம் மற்றும் தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டு, பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, நிவாசின் உடல் அவரது உறவினர்களிடம் வழங்கப்பட்டது. அப்போது, உறவினர்களும், நண்பர்களும் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்ததது.

இது குறித்து பேசிய நிவாசின் தாய் நவமணி,  தனியார் பேருந்துகள் கவனத்துடன் இயக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும், தனது மகன் இறந்துவிட்டாலும், அவரது உடல் உறுப்புகள் மூலம் மற்றவர்கள் வாழ்க்கையில் வாழ்வான் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.