நெல்லை அருகே இளைஞரை கிணற்றில் தள்ளி கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

 
judgement

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே இளைஞரை கிணற்றில் தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து  

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுடலைமுத்து (23). கடந்த 2020 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கிணற்றில் சுடலை முத்து சடலமாக கிடந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் சுடலைமுத்துவை முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த ஷ்யாம் சித்திரைவேல் (22) என்பவர் கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார், ஷ்யாம் சித்திரை வேலை கைது செய்தனர். 

arrest

இந்த வழக்கின் விசாரணை திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை நேற்று நிறைவடைந்த நிலையில், நீதிபதி குமரகுரு, குற்றவாளி ஷ்யாம் சித்திரைவேலுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று கொடுத்த முன்னீர்பள்ளம் போலீசாருக்கு, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் வெகுவாக பாராட்டினார்.