பாலக்கோடு அருகே தோட்டத்திற்குள் புகுந்து கோழியை பிடித்துச்சென்ற சிறுத்தை... சிசிடிவி காட்சி வெளியீடு!

 
leopard

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு  அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று அங்கிருந்த கோழியை பிடித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வாழைத்தோட்டம் பகுதியில் வெங்கடாஜலம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த தோட்டத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில், சிறுத்தை ஒன்று நுழைந்தது. அப்போது, தோட்டத்தில் இருந்த கோழிகூடாரம் லேசாக திறந்தது. சிறுத்தை அந்த கூடாரத்தை திறக்க முயன்ற நிலையில், அதில் இருந்து கோழி ஓன்று பறந்து சென்றது.

leopard

அப்போது, அந்த சிறுத்தை தாவிச்சென்று கோழியை கவ்வி கொண்டு தப்பிச்சென்றது. இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் இந்த காட்சிகள் தற்போது சமுக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள அந்த பகுதி பொதுமக்கள், வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து, அதனை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.