குளித்தலையில் சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த பெண் குழந்தை பலி!

 
infant

கரூர் மாவட்டம் குளித்தலையில் சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்து இரண்டரை வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வேலுர் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டரை வயதில் சுபாஷினி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் வேல்முருகன், மனைவி மற்றும் குழந்தையுடன் கரூர் மாவட்டம் குளித்தலை கோட்டைமேடு  பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு சமையல் செய்து கொண்டிருந்தபோது அடுப்பில் இருந்த சாம்பார் பாத்திரத்தில், குழந்தை சுபாஷினி தவறி விழுந்தார். இதில் பலத்த தீக் காயமடைந்த சுபாஷினியை குடும்பத்தினர் மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

kulithalai

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் திருச்சி அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று அதிகாலை குழந்தை சுபாஷினி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்து குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.