சாலை வசதி இல்லாததால் மலைக்கிராமத்துக்கு குழந்தை சடலத்தை சுமந்து சென்ற தந்தை!

 
kerala

கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே மலைக்கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் குழந்தையின் சடலத்தை தந்தை சுமந்து செல்லும் காட்சிகள் வெளியாகி பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகேயுள்ள கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதி முருகலா பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு பிறந்து 4 மாதங்களே ஆன சஜேஸ்வரி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து, குழந்தையை சிகிச்சைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

Kerala

இதனை தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்கு பின்னர் குழந்தையின் உடல் தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.  பாலக்காடு அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு உடல் எடுத்துச் செல்லப்ப்டடு உள்ளது. அப்போது, தாடிக்கொண்டு என்ற பகுதி வரை மட்டுமே சாலை வசதி இருந்ததால், அங்கிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவர்களது முருகலா பழங்குடி கிராமத்திற்கு குழந்தையின் சடலத்தை ஐயப்பன் ஏந்தியடி சென்றுள்ளார்.

அடர்ந்த வனப்பகுதி வழியாகவும், தொங்குபாலத்தின் மீது அவர் சடலத்தை ஏந்திச்செல்லும் காட்சிகளை சிலர் செல்போனில்  வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். இந்த காட்சிகள் தற்போது அதிகளவில்  பகிரப்பட்டு வருகிறது.