சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் அம்பாளிடம் வேல் வாங்கும் நிகழ்வு... முருகன் முகத்தில் அரும்பிய வியர்வையை கண்டு பக்தர்கள் பரவசம்!

 
sikkal

சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் அம்பாளிடம் முருகன் வேல்வாங்கும் நிகழ்வின்போது முருகன் சிலையில் வியர்வை அரும்பும் நிகழ்வை கண்டு பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர்.

நாகை மாவட்டம் சிக்கலில் பிரசித்தி பெற்ற சிங்காரவேலவர் கோவில் அமைந்துள்ளது. முருக     பெருமான் திருச்செந்துரில் சூரசம்ஹாரம் செய்ய சிக்கலில் வேல் வாங்கியதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த கோவிலில் கந்த சஷ்டிப் பெருவிழா கடந்த 24ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்பாளிடம் முருகன் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி, முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருளினார். மகா தீபாராதனைக்கு பிறகு முருகப் பெருமான் அஜபா நடனத்துடன் கோவிலுக்குள் வலம் வந்தார். அப்போது அம்பாள், வேல்நெடுங்கண்ணி சன்னதியிலிருந்து சக்திவேலை முருகனிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

sikkal

தொடர்ந்து சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது ஐம்பொன்னால் செய்யப்பட்ட முருகன் சிலையின் முகத்தில் முத்து முத்தாக வியர்வை அரும்பும் நிகழ்வு நடைபெற்றது. அதனை சிவாச்சாரியர்கள் வெண்பட்டால் துடைத்து பக்தர்களுக்கு காட்சிப்படுத்தினர். இந்த ஆன்மீக அற்புத நிகழ்வை கண்டு திரளான பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.