தேனியில் வரும் 9ஆம் தேதி மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்!

 
iti sutdents

தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் வரும் ஜனவரி 9ஆம் தேதி நடைபெற உள்ளதாக, ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் , மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் வரும் ஜனவரி 9ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு 500-க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர்.

theni collector

NCVT மற்றும் SCVT முறையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐடிஐயில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற / பெறாத அனைத்து பயிற்சியாளர்களும் கலந்து கொள்ளலாம். ஐடிஐயில் சேர்ந்து பயிற்சி பெற இயலாத 8, 10, 12ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதி உடையவர்கள் நேரடியாக  தொழிற்சாலைகளில் சேர்ந்து 3 முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சியும், ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி (Apprenticeship Training) பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம்.

இப்பயிற்சிக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், ஓராண்டு வயது வரம்பு சலுகையும் உள்ளது. எனவே , மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐடிஐயில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற / பெறாத அனைத்து பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு, ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.