பழனியில் தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

 
palani

பழனியில் குடும்ப தகராறில் தந்தையை அரிவாளால் வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி ராஜாஜி சாலையை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (75). இவரது மகன் மணிகண்டன் (40). கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி அன்று குடும்ப பிரச்சினை காரணமாக மாரிமுத்துவை, அவரது மகன் மணிகண்டன் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தார். இது தொடர்பாக பழனி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

judgement

இந்த வழக்கின் விசாரணை பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை நேற்று முடிவடைந்த நிலையில், வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி குற்றவாளி மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.