பெருந்துறை ஒன்றியத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடக்கம்!

 
peru

பெருந்துறை ஒன்றியதிற்குட்பட்ட மூங்கில் பாளையம் ஊராட்சியில் ரூ.10 லட்ச மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை அதிமுக எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள மூங்கில் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட காவிரி நகர், குமரன் நகர் பகுதிகளில் சரிவர குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதனால் தங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து தர வேண்டும் என பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ். ஜெயக்குமாரிடம் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று, எம்எல்ஏ ஜெயக்குமார் தனது தொகு மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் அமைக்கும் பணியை இன்று தொடங்கி வைத்தார்.

peru

தொடர்ந்து, காவிரி நகர், குமரன் நகர் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளுக்கு புதிய மின்மோட்டார் அமைத்து, அங்குள்ள மேல்நிலைத் தொட்டியில் தண்ணீர் ஏற்றும் பணியையும் எம்எல்ஏ ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அதிமுக ஒன்றிய செயலாளர் விஜயன் என்கிற ராமசாமி, விஜயபுரி ஊராட்சி தலைவர் சீனிவாசன், அதிமுக மாவட்ட பொருளாளர் மணி, பொன்முடி ஊராட்சி தலைவர் தங்கவேலு, மூங்கில் பாளையம் ஊராட்சி துணைத் தலைவர் சிவக்குமார், வர்த்தக அணி திவாகர், சிறுபான்மை பிரிவு தபுரோஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.