வாசுதேவநல்லூரில் பழங்குடியினர் பெருமை தின பேரணியை துவங்கிவைத்த ஆட்சியர்!

 
tenkasi

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் நடைபெற்ற பழங்குடியினர் பெருமை தினம் பேரணியை ஆட்சியர் ஆகாஷ் துவங்கி வைத்தார்.

பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்காக போராடிய பிர்சா முண்டாவின் பிறந்த நாளையொட்டி, தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் நேற்று பழங்குடியினர் பெருமை தினம் பேரணி நடைபெற்றது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற இந்த பேரணியை  மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கொடியசைத்து துவங்கி வைத்தார். வாசுதேவநல்லூர் பயணியர் விடுதி அருகே துவங்கிய இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக பழைய பேருந்து நிலையம் பகுதியில் சென்று நிறைவடைந்தது. இந்த பேரணியில் பழங்குடி மக்கள் இயக்க நிர்வாகிகள், தலையணை பகுதியை சேர்ந்த பழங்குடி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி, வருவாய் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

vasudeva

பேரணியை துவங்கி வைத்து பேசிய ஆட்சியர் ஆகாஷ், தென்காசி மாவட்டம் தலையணை பகுதி பழங்குடி மக்களின் கோரிக்கை ஏற்று, புளியங்குடி மற்றும் வாசுதேவநல்லூர் பகுதிககு விரைவில் பேருந்து சேவை துவங்கப்படும் என தெரிவித்தார். மேலும், அந்த பகுதி பழங்குடி மக்களுக்கு வீடுகள் கட்டுவது தொடர்பான கருத்துரு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்தார்.