திருவாரூரில் இலவச கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை துவங்கிவைத்த ஆட்சியர்!

 
tvr

திருவாரூர் மாவட்டத்தில் இலவச கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் ஆகியோர் கலந்துகொண்டு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை துவங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு 18 வயது முதல் 59 வயதிற்குட்பட்ட 1,27,921 பேர் தகுதியுடையவர்கள் என கணக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

tvr

பூஸ்டர் தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தகுதியுடையவர்களுக்கு செலுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எனவே 2ஆம் தவணை செலுத்திய தினத்தில் இருந்து 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு இலவச கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை 75 நாட்களுக்கு நடைபெறுகிறது. எனவே தகுதியுடையவர்கள் கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் என கேட்டுக் கொண்டார்.