அதியமான்கோட்டையில் பேருந்தில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு - இளம்பெண் கைது!

 
arrest

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் பேருந்தில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்க செயினை பறித்துச்சென்ற பெண்ணை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து செயினை பறிமுதல் செய்தனர். 

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள ஏலகிரியான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பவுனு(46). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் கூலி வேலைக்கு சென்றுவிட்டு பேருந்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்துச்சென்றனர்.  இதனால் அதிர்ச்சியடைந்த பவுனு, அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையனை தேடி வந்தனர்.

dharmapuri ttn

அப்போது, சேலத்தில் நடைபெற்ற திருட்டு வழக்கில்  கைதாகி சிறையில் உள்ள திருவண்ணாமலை மாவட்டம் பள்ளிப்பட்டியை சேர்ந்த பாரதி(32) என்ற பெண், பேருந்தில் பவுனிடம் இருந்து தங்க செயினை பறித்துச்சென்றது தெரியவந்தது. அதன் பேரில், அதியமான்கோட்டை போலீசார் பாரதியை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பாரதி மறைத்து வைத்திருந்த 4 பவுன் செயினை பறிமுதல் செய்தனர்.