மருத்துவ பணிசெய்ய தேர்வு நடத்தும் மத்திய அரசு திட்டத்திற்கு, இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு!

 
imc

மருத்துவம் பயின்ற பிறகு மருத்துவராகப் பதிவுசெய்து மருத்துவ தொழில் நடத்த தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும், இதனை மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மாநில முன்னாள் தலைவர் பிரகாசம் கேட்டுக்கொண்டார்.

இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளை சார்பில் மருத்துவர்கள் தின விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சமுக சேவையாற்றிய பல்வேறு நபர்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும், மருத்துவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மாநில தலைவர் மருத்துவர் பழனிச்சாமி, முன்னாள் தலைவர் கே பிரகாஷ், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பிரேமகுமரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் பிரகாஷ் கூறியதாவது:- மத்திய அரசு மருத்துவம் பயின்ற மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வு நடத்த உள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெற்றால்தான் அவர்கள் படித்த பின்பு தங்களை பதிவுசெய்து கொண்டு தொழில் நடத்த முடியும். நெக்ஸ்ட் தேர்வில் 50 சதவீதம் கூட மாணவர்கள் வெற்றி பெறுவது கடினம். நமது குழந்தைகள் உட்பட பலர் மருத்துவம் படிக்கின்றனர். எனவே இந்த தேர்வு குறித்து மாணவர்கள் மத்தியில் நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்திய மருத்துவ சங்கம், மருத்துவ தொழிலை பாதுகாக்க பல்வேறு போராட்டங்கள் நடத்தி வெற்றி பெற்றுள்ளது. இந்த பிரச்சனை குறித்தும், போராடி வெற்றி பெற வேண்டும், இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டார்.

generic erode

தொடர்ந்து மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பிரேமகுமரி பேசியதாவது:- தமிழக அரசு மருத்துவத்துறை தொடர்பாக பல்வேறு விதிகளை வகுத்துள்ளது. அவற்றை மருத்துர்களும், மருத்துவமனைகளும் முறையாக பின்பற்றினால் எந்த பிரச்சினையும் இல்லை. இதேபோல், மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்த கிளினிகல் எஷ்டாபிளிஷ்மெண்ட் ஆக்ட் என்ற சட்டம் உள்ளது. அதன் கீழ் அனைத்து மருத்துவமனைகளும் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். ஆனால் பலர் இன்னும் பதிவு செய்யவில்லை, இது குறித்து பல்வேறு சந்தேகங்களை அவர்கள் எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக இணையதளம் மூலமாகவே விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த சட்டம் குறித்து தெளிவுரை வழங்க சென்னையிலிருந்து உயரதிகாரிகள் கொண்ட குழு ஈரோட்டிற்கு அழைத்து, கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில், தங்களது சந்தேகங்களை தெரிவித்து தெளிவுபெறலாம், இவ்வாறு அவர் பேசினார். 

இந்த கூட்டத்தில், இந்திய மருத்துவ சங்க தேசிய துணைத் தலைவர் சிஎன் ராஜா, இந்திய மருத்துவ சங்க தலைவர் தேர்வு டாக்டர் அபுல் ஹஸன், முன்னாள் தலைவர் டாக்டர் சுகுமார், ஈரோடு கிளை செயலர் டாக்டர் சரவணன், தலைவர் செந்தில் குமார், பொருளாளர் பார்த்திபன், நிர்வாகிகள் மாதவன், ஜெயந்த்குமார், மதன்குமார், சக்கரவர்த்தி, பிரசாத் செந்தில்வேல்,பூர்ணிமா உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.