திருவாரூரில் "நம்ம ஊரு சூப்பரு" விழிப்புணர்வு செல்ஃபி பதாகையை திறந்துவைத்த ஆட்சியர்!

 
tvr

திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் "நம்ம ஊரு சூப்பரு" சுற்றுப்புற தூய்மை விழிப்புணர்வு செல்ஃபி பதாகையை, ஆட்சியர் காயத்ரி திறந்து வைத்து, உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில்  "நம்ம ஊரு சூப்பரு" விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் பொதுமக்களிடையே சுற்றுப்புற தூய்மை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செல்ஃபி பதாகை அமைக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் இன்று திறந்து வைத்தார்.தொடர்ந்து, சுற்றுப்புற தூய்மை மற்றும் குப்பைகளை தரம் பிரித்தல்  தொடர்பான உறுதிமொழி ஆட்சியர் காயத்ரி தலைமையில் எடுக்கப்பட்டது.

tvr

இந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மன்னார்குடி வட்டாரம் சுந்தரக்கோட்டை ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பிற்கு, மன்னார்குடி பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையின் சார்பில் ரூ.86 லட்சத்து 60 ஆயிரம் வங்கி பெருங்கடன் தொகைக்கான காசோலையை, ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.