தஞ்சை பெரிய நந்திக்கு ஆயிரம் கிலோ காய், கனிகளை கொண்டு சிறப்பு அலங்காரம்!

 
tanjore

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் பெரிய நந்திக்கு ஆயிரம் கிலோ காய், கனி மற்றும் இனிப்புகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் இன்று மாட்டு பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பெரிய நந்திக்கு ஆயிரம் கிலோ காய், கனி மற்றும் இனிப்புகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், பெரிய நந்தியின் முன்பாக 108 பசுக்களுக்கு கோ பூஜை செய்து, சர்க்கரை பொங்கல் வழங்கி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து, நந்தி பெருமானுக்கு படைக்கப்பட்ட காய், கனிகள் மற்றும் இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

tanjore

முன்னதாக, மாட்டு பொங்கலை முன்னிட்டு பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.  மாட்டு பொங்கலை ஒட்டி தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பெரிய நந்தியை வழிபட்டனர்.