மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கிய தென்காசி ஆட்சியர்!

 
tenkasi

தென்காசி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 2 மாற்றுத் திறனாளிகளுக்கு, ஆட்சியர் ஆகாஷ் பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்.

தென்காசி மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவிததொகை மற்றும் இதர மனுக்கள் என  மொத்தம் 284 மனுக்கள் பெறப்பட்டன.தொடர்ந்து மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கிய ஆட்சியர் ஆகாஷ், தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியர் ஆகாஷ் அறிவுறுத்தினார்.

tenkasi

பின்னர் இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, ரூ.1.60 லட்சம் மதிப்பிலான மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலலர் ஜெய்னுலாபுதீன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொறுப்பு) முத்துமாதவன், தனித்துணை ஆட்சியர் சமுக பாதுகாப்பு திட்டம் (பொ) ராஜமனோகரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.