திருச்செங்கோடு அருகே கோவில் பொங்கல் விழா - முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பங்கேற்பு!

 
kc karuppanan

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மகாமுனி அம்மன் கோயில் பொங்கல் விழாவில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
ஈரோடு மாவட்ட அதிமுக இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் பிரகாஷ் இல்ல பொங்கல் விழா, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே புள்ளிபாளையம் மகாமுனி அம்மன் கோவிலில் இன்று நடைபெற்றது. இந்த பொங்கல் விருந்தில் முன்னாள் அமைச்சரும், பவானி சட்டமன்ற உறுப்பினருமான கே.சி.கருப்பணன், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும், மாநில அம்மா பேரவை இணை செயலாளருமான ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

kckaruppanan

இந்த நிகழ்ச்சியில், அதிமுக மாவட்ட பொருளாளர் கேபிஎஸ் மணி, ஒன்றிய செயலாளர்கள் அருள்ஜோதி கே செல்வராஜ், ஜெகதீஸ், மேகநாதன், பொதுக்குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, பவானி நகர செயலாளர் சீனிவாசன், மாணவரணி மணிகண்டன், தகவல் தொழில்நுட்ப அணி விவேக், ஒன்றிய செயலாளர் நவீன், வர்த்தக அணி ராஜேந்திரன், இளைஞர், இளம் பெண்கள் பாசறை ரவிக்குமார், பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.