திண்டுக்கல்லில் திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... வருவாய் கோட்டாட்சியர் விசாரணை!

 
suicide

திண்டுக்கல்லில் திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் அருகே முத்தழகுபட்டி பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு,  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுகன்யா(25) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், சுகன்யாவிற்கும், கணவர் வினோத்குமாருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால்  சுகன்யா மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று கணவன் - மனைவி இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.

dgl gh

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த சுகன்யா நேற்று காலை தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலின் பேரில் திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சுகன்யாவின் உடலை கைப்பற்ற் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சுகன்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே,  திருமணமான 3 ஆண்டுகளில் சுகன்யா தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார் விசாரணை மேற்கொண்ட வருகிறார்.